பதிவு செய்த நாள்
16
மார்
2015
11:03
அந்தியூர் : அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே புகழ் பெற்ற கோவிலாகும். ஆண்டு தோறும், பங்குனி மாதம் தீ மிதி திருவிழாவுடன், தேரோட்டமும் நடக்கும்.
இங்குள்ள தேர், மிகவும் பழுதடைந்து சக்கரங்கள் மற்றும் தேரில் உள்ள சிற்பங்களும், உடைந்து விட்டன. கடந்த மூன்று ஆண்டுகளாக தோரோட்டம் நடக்கவில்லை. எனவே, புதிய தேர் செய்ய அறநிலையத்துறை ஆணையர் பொது நிதியில் இருந்து, பத்து லட்சமும், பழனி பாலதண்டாயுதபாணி கோவில் நிதியில் இருந்து, 18.5 லட்சம் ரூபாயும் நிதியாக, தமிழக அரசு ஒதுக்கிடு செய்தது.கடந்த, 2012 ஆண்டு, புதிய தேர் செய்யும் பணிகள் துவங்கப்பட்டது.தேர் மற்றும் சிற்பங்கள் செய்ய, கேரள மாநிலத்தில் இருந்து வேங்கை மற்றும் இலுப்பை மரங்கள் வாங்கப்பட்டு, தேர் சிற்ப வடிவமைப்பு கலைஞர்களை கொண்டு, தேருக்கு, 5 நிலை மாடங்கள் அமைக்கப்பட்டு, ஆய கலைகள், 64 உடன், 301 சிற்பங்கள் செதுக்கப்பட்டு, புதிய தேர் பணிகள் முடிவடைந்தது. இத்தேருக்கு அச்சாணி மற்றும் சக்கரம் தயாரிக்கும் பணி திருச்சி பெல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, ஐந்து டன் எடை அளவில் அச்சாணி மற்றும் ராட்சத சக்கரங்கள் செய்து பொருத்தப்பட்டது.இப்பணிகள் முடிவடைந்து, நேற்று காலை புதிய தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. எம்.எல்.ஏ., ரமணீதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.