பதிவு செய்த நாள்
16
மார்
2015
12:03
சென்னை:கோவில்களில் முடி திருத்தும் பணியில் உள்ளோரை, அரசு ஊழியராக மாற்ற வேண்டும் என, தமிழ்நாடு மருத்துவ சமுதாய சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. தமிழ்நாடு மருத்துவ சமுதாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், சென்னையில் நடந்தது. இதில், எடுத்த நடவடிக்கைகள் குறித்து, மாநிலத் தலைவர் ரவிபாரதி கூறியதாவது:சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களில், பிரதிநிதித்துவம் இல்லாத, மருத்துவ சமுதாய வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும். மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், மருத்துவ சமுதாயத்தினருக்கு, 5 சதவீதம் ஒதுக்கீடு தர வேண்டும். சமுதாய மாணவர்கள் பயன்பெறும் வகையில், சித்த மருத்துவம், செவிலியர் பணியிடங்களில், 20 சதவீத முன்னுரிமை தர வேண்டும்; கோவில்களில், முடி திருத்தும் வேலை செய்வோரை, அரசு ஊழியராக மாற்ற வேண்டும் என, தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.அரசு கண்டு கொள்ளாவிட்டால், மாநிலம் தழுவிய மாநாடு நடத்தி வலியுறுத்துவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.