பதிவு செய்த நாள்
16
மார்
2015
12:03
சங்கராபுரம்: முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளை முன்னிட்டும், மீண்டும் முதல்வராக வேண்டி விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் 6700 பேர் கலந்து கொண்ட பால்குட ஊர்வலம் நடந்தது. சங்கராபுரம் தாலுகா அலுவலகம் அருகிலிருந்து புறப்பட்ட பேரணிக்கு அமைச்சர் மோகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் குமரகுரு, அழகுவேலுபாபு, சேர்மன் அரசு முன்னிலை வகித்தனர். கடைவீதி வழியாக தேவபாண்டலம் மாநாட்டு மாரியம்மன் கோவிலை பேரணி சென்றடைந்தது. அங்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன், சர்க்கரை ஆலை இணைய தலைவர் ஞானமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், ராஜேந்திரன், கதிர் தண்டபாணி, துணை சேர்மன் திருமால், கூட்டுறவு வங்கி தலைவர்கள் குசேலன், ராஜேந்திரன், கோவிந்தராஜ், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.