பதிவு செய்த நாள்
16
மார்
2015
12:03
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட சத்யசாயி சேவா சமிதி உறுப்பினர்கள் குழுவாக இணைந்து, ஒவ்வொரு மாதமும் கோவிலில் உழவாரப் பணிகள் மற்றும் சுற்றுப்புற தூய்மை பணிகளை மேற்கொள்கின்றனர். நேற்று, நல்லூர் விஸ்வேஸ்வரர் கோவிலில், சத்யசாயி சேவா சமிதி உறுப்பினர்கள் தூய்மை பணி மேற்கொண்டனர். பரிவார மூர்த்திகள், அதிகார நந்தி, நந்தி வாகனம், தீப ஸ்தம்பம் போன்றவை, பச்சரிசி மாவு, தயிர், கடலை மாவு, எலுமிச்சம்பழம் போன்றவற்றால் சுத்தம் செய்யப்பட்டன. சுற்றுப்பிரகாரம், கோவில் வளாகத்தில் இச்செடிகள், புற்கள் அகற்றி, சுத்தம் செய்யப்பட்டன.இப்பணியில், 25 பெண்கள் உட்பட 40 பேர் பங்கேற்றனர்.