திருவாரூர்: சபரிமாலையில் 48 நாட்கள் தங்கி பல்வேறு சேவைகள் செய்த ஐயப்ப சேவா சங்க திருவாரூர் மாவட்டத் தொண்டர்கள் முதலிடம் பெற்றனர். இதற்கான பாராட்டு சான்றுடன் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். சபாரி மலையில் ஆண்டு தோறும் பக்தர்கள் வருகையை யொட்டி தமிழகம், கேரளா மற்றும் ஆந்திராவில் உள்ள ஐயப்பா சேவா சங்கத்தினர் 48 நாட்கள் தங்கி பல்வேறுசேவைகள் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு லட்ச கணக்கான பக்தர்கள் வந்த போது ஐயப்பா சேவா சங்கத் தினர்கள் பல்வேறு சே வைகளை செய்து வந்தனர். இதில் திருவாரூர் மாவட்ட சேவா சங்கத்தினர் 67 பேரின் சேவையை பாராட்டி சபரிமலை நிர்வாகத்தின் முதலிட சேவைக்கான சான்றுகளை மாவட்ட நிர்வாகத்தினரை அழைத்து பாராட்டு சான்று வழங்கி சிறப்பித்தனர். நேற்று திருவாரூர் அருகே காட்டூர் சபரிமலை வாசன் ஐயப்பா சேவா சங்க மாவட்ட அலுவகத்தில் பாராட்டு சான்று வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். பொருளர் ஜெயக்குமார் வரவேற்றார். செயலர் குப்புசாமி 67 பேருக்கும் சான்றிதழ் வழங்கி, சால்வை அணிவித்து சிறப்பித்தார். பின்னர் மாவட்ட செயற்குழுக்கூட்டத்தில் இனிவரும் ஆண்டுகளில் மேற் கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசி,தீர்மானம் நிறைவேற்றினர். பெருமாள்சாமி நன்றி கூறினார்.