திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் பெரிய வைரத்தேர் ரூ.25 லட்சத்தில் புதுப்பிக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. 40 டன் எடை கொண்ட இத்தேர், பங்குனி திருவிழா திருக்கல்யாணம் முடிந்து மறுநாள் கிரிவீதிகளில் வலம் வரும். பழமை வாய்ந்த இத்தேர் உபயதாரர் மூலம் சீரமைக்கப்படுகிறது.ஸ்தபதி நாகமுத்து கூறுகையில், தேர் இடதுபுறம் ஆறு இஞ்ச் இறங்கி விட்டது. அவற்றை சரிசெய்வதோடு, பழுதடைந்த மரச்சிற்பங்களுக்கு பதில் புதிய சிற்பங்கள் பொருத்தப்படுகின்றன. மேல் பகுதி சிம்மாசனம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது என்றார். அடுத்த மாதம் 7ம் தேதி பங்குனி திருவிழா தேரோட்டம் நடக்கிறது.