பதிவு செய்த நாள்
18
மார்
2015
10:03
மயிலாப்பூர்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்க அஷ்டோத்தர மாலை மற்றும் தங்க வேல், சேவல் கொடி ஆகியவற்றை, பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர். மயிலாப்பூரை சேர்ந்த பக்தர் ஷோபனா என்பவர், கற்பகாம்பாளுக்கு, அரை கிலோ தங்கத்தில் செய்யப்பட்ட அஷ்டோத்தர மாலையை காணிக்கையாக அளித்துள்ளார். அதன் மதிப்பு, ௧௫ லட்சம் ரூபாய். அந்த மாலை, விசேஷ நாட்களில், கற்பகாம்பாள் மூலவருக்கு சார்த்தப்படும். மேலும், வரும், 26ம் தேதி துவங்க உள்ள பங்குனி பெருவிழாவில், உற்சவர் கற்பகாம்பாளுக்கும் சார்த்தப்படும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அதேபோல், கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள சிங்காரவேலருக்கு, மயிலாப்பூரை சேர்ந்த சிந்துாரி தருண் என்பவர், தங்க வேல் மற்றும் சேவல் கொடியை வழங்கியுள்ளார். அவை இரண்டின் மதிப்பு தலா, 30 லட்சம் ரூபாய்.