பதிவு செய்த நாள்
18
மார்
2015
11:03
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும், 25ம் தேதி நடக்கிறது.திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோவில் வளாகத்தில் உள்ள, சித்தி விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஆதிகேசவ பெருமாள், நடராஜர், காசிவிஸ்வநாதர், சகஸ்ரலிங்கம், மல்லிகார்ஜீனர், நல்லீசர், ஆதிஷேசன், சிவசூரியன், பைரவர் உள்ளிட்ட சன்னதிக்கு திருப்பணிகள் நிறைவுற்று, கும்பாபிஷேக விழா நடக்கிறது.வரும், 22ம் தேதி விக்ஜேனஸ்வரர் பூஜை, அனுக்ஞை, தன பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரகணம், அங்குரார்பணம், ரஷாபந்தனம், கும்பஅலங்காரம், முதற்கால யாக பூஜை நடக்கிறது.வரும், 23ம்தேதி, மங்கள இசை, தேவார பன்னிசை, விசேஷ சாந்தி, நான்காம் கால யாக பூஜை, தீபாராதனை நடக்கிறது. 25ம் தேதி காலை, 4 மணிக்கு மங்களஇசை, தேவார பன்னிசை, பரிவாரங்கள் யாக சாலை பூஜை, ஆறாம் கால யாக பூஜை நடக்கிறது.காலை, 9.30 மணிக்கு ராஜ கோபுரம் மற்றும் அனைத்து விமானங்கள் சம கால கும்பாபிஷேகம், காலை, 9.45 மணிக்கு செங்கோட்டுவேலவர் கும்பாபிஷேகம், காலை, 10 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் கும்பாபிஷேகம், காலை, 10.15 மணிக்கு நாகேஸ்வரர் கும்பாபிஷேகம், திருக்கல்யாணம், திருவீதிஉலா, ஆதிகேசவபெருமாள் மற்றும் பரிவாரமூர்தத்திகள் மஹாசம்ப்ரோஹணம் நடக்கிறது. 26ம் தேதி முதல் மண்டல பூஜை நடக்கிறது.