பரங்கிப்பேட்டை: சிதம்பரம் அருகே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் பவள விழாவையொட்டி 12 ஏழைக் குடும்பங்களுக்கு பசு மாடுகள் வழங்கப்பட்டது. சிதம்பரம் அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தில் கடலுõர் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மேல்ம ருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் பவள விழாவையொட்டி 12 ஏழை குடும்பங்களுக்கு பசுமாடுகள் மற்றும் ஆடைதானம் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் முருகு வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். வேள்விக்குழுத் தலைவர் செல்வராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்டச் செயலர் சண்முகம், 12 ஏழை குடும்பங்களுக்கு பசு மாடுகள் மற்றும் ஆடைதானம் வழங்கினார். தணிக்கைக்குழு கணபதி, பிரசாரக்குழு சுப்ரமணியன், வட்டத் தலைவர்கள் பார்த்தசாரதி, கண்ணன், ஊராட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம், வேள்விக்குழு மனோகரி, அஞ்சம்மாள், லதா, வீரசேகரன், கண்ணதாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.