பதிவு செய்த நாள்
18
மார்
2015
11:03
துறையூர்:துறையூர், ஆறுநாட்டு வேளாளர் சங்க இளைஞரணி சார்பில், இரண்டாவது ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது .பூஜையில் அரசு தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டி கூட்டு பிரார்த்தனை, மிருதுளா, சந்தியா, லோஷப்ரியா, ஸ்ரீயா ஆகியோரின் பரதநாட்டியம், இசை நிகழ்ச்சி நடந்தது. திருவிளக்கு பூஜையில், 238 பெண்கள் பங்கேற்று பூஜை செய்தனர். பூஜையை பெருமாள்மலை அடிவாரம் குருசிவாச்சாரியர் குடும்பத்தினர் செய்தனர். பூஜையை சங்க கவுரவ தலைவர் செல்வராஜ், ஆலோசகர் தர்மன்ராஜேந்திரன், சென்னை மணிபிள்ளை, சதாசிவம் துவக்கி வைத்தனர். சங்க துணை தலைவர் மாணிக்கம், செயலாளர் அழகேந்திரன், துணை செயலாளர் சரவணன், பெருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட சங்கத்தினர் பங்கேற்றனர். சங்க இளைஞரணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பூஜை ஏற்பாடுகளை செய்தனர்.