கம்பம் : காமயகவுண்டன்பட்டியில் உள்ள கருமாரியம்மன் கோயில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இந்த விழா மூன்று நாட்கள் நடைபெறும். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளிலும் அதனை தொடர்ந்து நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் நகர்நலகமிட்டி தலைவர் மோகன்தாஸ், உத்தமபாளையம் டி.எஸ்.பி. கண்ணன், பேரூராட்சி தலைவர் சாந்தி, கூட்டுறவு வங்கி தலைவர் திரிலோகசுந்தர், பேரூராட்சி துணை தலைவர் பொன்சரவணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். மார்ச் 24 முதல் 26 வரை நடைபெறும் திருவிழாவில் பெண்கள் பால்குடம் எடுத்துவருதல், அலகு குத்துதல், முளைப்பாரி ஊர்வலம் என பல்வேறு வேண்டுதல்கள் பக்தர்களால் நிறைவேற்றப்படும்.