பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் வரும் 21ம் தேதி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. பண்ருட்டி திருவதிகை ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி மாத ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு வரும் 21ம் தேதி காலை 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம். 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, 9:00 மணிக்கு பெரிய பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், மதியம் 1:00 மணிக்கு தீபாராதனையும், மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, 6:00 மணிக்கு நித்யபடி பூஜையும், இரவு 8:30 மணிக்கு உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் உள்புறப்பாடு நடக்கிறது. 9:30 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடக்கிறது.