பெ.நா.பாளையம் : யுகாதி பண்டிகையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. நரசிம்மநாயக்கன்பாளையம் பழையூரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. மூலவர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார். உற்சவ கோலத்தில் தாயாருடன் லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, தங்கள் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் நெய்விளக்கேற்றி பெருமாளை வழிபட்டனர்.இதே போல பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர், பாலமலை ரங்கநாதர் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.