சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலில், இந்த ஆண்டுக்கான குண்டம், இன்று (23ம் தேதி) இரவு பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. நாளை, இரவு முதல் பண்ணாரி மாரியம்மன் உற்சவர் வீதி உலா நிகழ்ச்சி துவங்குகிறது. 31ம் தேதி செவ்வாய்கிழமை கம்பம் சாட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.ஏப்., 7ம் தேதி அதிகாலை, 4 மணியளவில், குண்டம் விழாவில் முக்கிய நிகழ்வான தீ மதிப்பு நிகழ்ச்சி நடக்கிறது. 8ம் தேதி புஷ்பரதம், 9ம் தேதி மஞ்சள் நீராட்டு, 10ம் தேதி திருவிளக்கு பூஜை மற்றும், 13ம் தேதி மறுபூஜை விழாவும் நடக்கிறது.