பெங்களூரு: ராமாஞ்சநேயா கோவிலில், வரும் 28ம் தேதி, ராமநவமி கொண்டாடப்படுகிறது. ராமநவமியை முன்னிட்டு, சிவாஜி நகர் பஸ் நிலையம் எதிரிலுள்ள ராமாஞ்சநேயா கோவிலில், வரும் 28ம் தேதி, காலை 6:30 மணிக்கு, பஞ்சாமிர்த அபிஷேகம், 7:30 மணியிலிருந்து வெள்ளி கவசம், மலர் அலங்காரம் செய்யப்படுகிறது. காலை 10:30 மணிக்கு, மகா மங்களார்த்தி பின், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. பூஜையில் பங்கேற்க, 401 ரூபாய் கட்டணம் என, ஆலய டிரஸ்டியினர் தெரிவித்து உள்ளனர்.