பதிவு செய்த நாள்
27
மார்
2015
12:03
திருப்பதி: கடப்பா மாவட்டத்தில், 12 மணி நேரத்தில், சிவன் கோவில் கட்டி, ஆள்ளகட்ட சிற்பிகள் சாதனை படைத்தனர்.ஆந்திர மாநிலம், நந்தியாலாவில் உள்ள, அமரலிங்க விசாக கேந்திரம் வளாகத்தில், 12 அடி அகலம், ஒன்பது அடி உயரத்தில், சிவன் கோவில் கட்ட, அதன் நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி, ஆள்ளகட்ட சிற்பிகளை வரவழைத்து, கடந்த புதன்கிழமை அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கட்டும் பணிகள் துவக்கப்பட்டது.கிரேன் உதவியுடன், கோவில் கட்டப்பட்டதால், மதியம், 1:00 மணிக்குள் கட்டட பணிகள் நிறைவுபெற்றது.பின், மாலை, 4:00 வரை சிற்பிகள், கோவில் பிரகாரத்தை, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம், 12 மணி நேரத்தில், கோவில் கட்டி, ஆள்ளகட்ட சிற்பிகள் சாதனை படைத்தனர்.இதன் கருவறையில், ஸ்படிக லிங்கத்தை, வரும் சிவராத்திரி அன்று, பிரதிஷ்டை செய்ய உள்ளனர். இந்த லிங்கத்தின் மீது, தினமும், சூரியகிரணங்கள் படும் படி, கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு, 20 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதில், ஒரு பகுதி நிதியை, வேலூர், பொற்கோவில் நிர்வாகம் அளித்ததாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.