சென்னை: சென்னமல்லீஸ்வரர், மல்லிகேஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்களில், நேற்று பங்குனி உத்திர கொடியேற்றம் நடந்தது. பாரிமுனை தேவராஜ முதலி தெருவில் உள்ள சென்னமல்லீஸ்வரர் கோவில், மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவிலில் நேற்று, காலை பங்குனி கொடியேற்றம் நடந்தது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு 7:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.