விருத்தாசலம் கோவிலில் ராமநவமி மகோற்சவம் இன்று துவங்குகிறது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2015 11:03
விருத்தாசலம்: விருத்தாசலம் வரதராஜ பெருமாள் கோவிலில் ராமநவமி மகோற்சவம் இன்று (28ம் தேதி) துவங்குகிறது. விருத்தாசலம் சாத்துக்கூடல் சாலை, வரதராஜ பெருமாள் கோவிலில் ராமநவமி மகோற்சவம் இன்று துவங்கி, வரும் 8ம் தேதி வரை நடக்கிறது. 8ம் தேதி காலை 9:00 மணிக்கு திருமஞ்சனம், திருவாராதனம், மாலை 3:00 மணிக்கு சீதா கல்யாணம், மாலை 4:00 மணிக்கு ராமர் பட்டாபிஷேகம் ஆகிய வைபவங்களும், ராமபக்தி எனும் தலைப்பில் பக்தி உபன்யாசம், மாலை 6:30 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து ஆஞ்சநேயர் சுவாமிக்கு வடமாலை சாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.