பங்குனி உத்திர திருவிழாவில் வரதருக்கு மூன்று மாலை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2015 01:04
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று இரவு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், மூன்று மாலையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா, கடந்த சனிக்கிழமை துவங்கியது. நான்காம் நாளான நேற்று மாலை 6:30 மணியளவில், 100 கால் மண்டபத்தில் மலையாள நாச்சியாருடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார். இவ்விழாவில் பெருமாள் மூன்று மாலை அணிந்து காட்சி அளித்தார். இருவரும் கோடாரி முடிச்சி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.தொடர்ந்து, ஊஞ்சல் சேவை நடந்தது. பின்னர் தீப ஆராதனை முடிந்து, கண்ணாடி அறைக்கு திரும்பி சென்றனர்.