பதிவு செய்த நாள்
03
ஏப்
2015
01:04
தூத்துக்குடி:கோவில்பட்டி அருகே கழுகுமலை கழுகாச்சலமூர்த்தி கோயில் பங்குனி உத்திர
தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்தனர்.கழுகுமலை,கழுகாச்சலமூர்த்தி கோயில் பங்குனி திருவிழா மார்ச்25 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவிழா நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடந்தது.தேரோட்டம்: 9 ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது, திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி நடந்தது. காலை 10 மணிக்கு கோ ரதத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வர பெருமாள்,சட்டரதத்தில் விநாயக பெருமான்,வைரத்தேரில் ஸ்ரீகழுகாச்சலமூர்த்தி சுவாமிகள், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் தெற்கு ரதவீதி, பஸ் ஸ்டாண்ட்,கோயில் மேல வாசல் தெரு, அரணமனை வாசல்தெரு,கீழபஜார், தெற்குரதவீதியை அடைந்து தேர் நிலைக்கு வந்தது.இன்று ( ஏப்.3) தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு தபசு காட்சியும் நடக்கிறது. நாளை இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், தந்த பல்லக்கில் பட்டிணப்பிரவேசம் நிகழ்ச்சியும் நடக்கிறது.