நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் கருட சேவையில் வேணுகோபால சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நெல்லிக்குப்பம் காந்தி வீதியில் உள்ள புகழ்பெற்ற பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயிலில் கருட சேவை உற்சவம் நடந்தது. அதனையொட்டி சிறப்பு திருமஞ்சனமும், வேணுகோபால சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ரமேஷ் பட்டாச்சாரியார் பூஜைகளை செய்தார். நிர்வாக அதிகாரி லீமாள், வெங்கட் ராமகிருஷ்ணன், கவுன்சிலர் கந்தசாமி உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.