பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நடந்த பங்குனி உத்திர விழாவில், சுந்தரராஜப் பெருமாளுக்கும் சவுந்தரவல்லித் தாயாருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக காலை 9 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் மணக்கோலத்தில் வீதிவலம் வந்தார். பின்னர், காலை 9.50 மணிக்கு சுந்தரராஜப் பெருமாளுக்கும் சவுந்தர வல்லி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதை யொட்டி, தினமும் பெருமாள், தாயார் ஊஞ்சல் சேவையில் அருள்பாலிப்பர். ஏப்., 7 ல், இரவு 7 மணிக்கு பூப் பல்லக்கில் பட்டணப்பிரவேசம் நடைபெறும். இதேபோல், எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், வரதராஜப் பெருமாளுக்கும் பெருந்தேவி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.