பதிவு செய்த நாள்
06
ஏப்
2015
01:04
அவிநாசி : அவிநாசி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, உழவாரப்பணிகள், நேற்று நடைபெற்றன. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா, வரும் 23ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சேக்கிழார் புனிதர் பேரவை மற்றும் "கிளீன் டுடே இந்தியன்ஸ் அமைப்புகளை சேர்ந்த 275 பேர், உழவார பணிகளில் நேற்று ஈடுபட்டனர். கொடிமரம், விளக்கு, பிரபாவளையங்கள், ஊஞ்சல், பூஜை பாத்திரங்கள், பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டன. கோவில் முழுவதும் தண்ணீர் ஊற்றி, கழுவப்பட்டது.சேக்கிழார் புனிதர் பேரவை நிறுவனர் முத்து நடராஜன், "கிளீன் டுடே இந்தியன்ஸ் அமைப்பாளர் அருண் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.