சிதம்பரம், தில்லைக்காளியம்மன் கோயில் பிராகாரத்தில் நின்ற கோலத்தில் வீணை வித்யாம்பிகை என்ற பெயருடன் சரஸ்வதி தேவியையும், கடம்பவன தட்சிணரூபினி எனும் பெயரில் தட்சிணாமூர்த்தியின் பெண்வடிவ சக்தியையும் தரிசிக்கலாம். வியாழக்கிழமையன்று இவர்கள் சன்னதியில் விளக்கேற்றி வலம் வந்து வணங்கினால், கல்வியில் முன்னேற்றம் கிட்டும்.