நிலச்சரிவால் நிறுத்தப்பட்ட கேதார்நாத் யாத்திரை மீண்டும் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2025 11:08
உத்தரகண்ட்: ருத்ரபிரயாக், கேதார்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. நேற்று ஏற்பட்ட நிலச்சரிவால் தடைபட்ட சோன்பிரயாக் மற்றும் கௌரிகுண்ட் இடையேயான சாலை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதையில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, பாதை மூடப்பட்டது. ஒரு மலைப்பாதை இடிந்து விழுந்ததால், பொதுப்பணித் துறை கற்கலை அகற்றும் பணிகளைத் தொடங்கியது. பணிகள் நடந்து வந்த நிலையில் தடைபட்ட சோன்பிரயாக் மற்றும் கௌரிகுண்ட் இடையேயான சாலை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்த கேதார்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. பக்தர்கள் சம்போ மகாதேவா கோஷத்துடன் யாத்திரை துவங்கினர்.