தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழா தொடங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2025 10:08
திண்டுக்கல்; தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடிப்பெரும் திருவிழா தொடர்ந்து நேற்று காலை 9:00மணிக்கு மேல் கொடியேற்றம் நடந்தது. சவுந்திராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள சிறப்பு பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து கோவிந்தா நாமங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி, கருட பிரதிஷ்டை நடைபெற்றது. கொடியேற்றம் தொடர்ந்து நேற்று இரவு சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி எழுந்தருள வீதிகளில் உலா வந்தார். விழாவில் தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி காட்சியளிக்கிறார். ஆக. 7ல் திருக்கல்யாணம், 10 ம் தேதி தேரோட்டம், 11 ம் தேதி தெப்ப உற்ஸவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி தலைமையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் பணியாளர்கள், பட்டாச்சாரியார்கள் செய்கின்றனர்.