புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் அமைந்துள்ள சுந்தரமூர்த்தி சுவாமி மடத்தில், நேற்று ஆடி சுவாதி நட்சத்திற மகோற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை அனுக்ஞை மற்றும் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாஹவாசனம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லஷ்மி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. அன்று மாலை பூர்வாங்க பூஜை, ருத்ர கலச பூஜை, ஏகாதச ருத்ர ஜபம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரண்டாம் நாளான நேற்று காலை கலச பூஜை, ருத்ர ஹோமம், வசோத்தாரை, பூர்ணாஹூதியை தொடர்ந்து சுந்தரமூர்த்தி சுவாமிக்கு கலசாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சுந்தரமூர்த்தி சுவாமி ஆலய பிரகார உலா, ஐக்ய உற்சவம் மற்றும் தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை ஆதிசைவ சுந்தரமூர்த்தி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.