கச்சிராயபாளையம்: நல்லாத்தூர் புதுப்பட்டு மாரியம்மன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. கச்சிராயபாளையம் அடுத்த நல்லாத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமையான புதுப்பட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தின் கடைசி புதன்கிழமை அன்று முதல் தேரோட்டமும், சித்திரை மாதத்தின் முதல் புதன்கிழமையில் 8 ம் தேர் திருவிழாவும் நடக்கிறது. இதன்படி நேற்று மாலை 4:00 மணிக்கு நடந்த திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர். சுற்று வட்ட கிராமப்புறங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்ஸ்பெக்டர் ராஜக்கண்ணன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.