பதிவு செய்த நாள்
09
ஏப்
2015
12:04
துறையூர்: துறையூர் அருகே புலிவலத்தில் ஓம் சக்தி மகா மாரியம்மன் கோவிலில், 108 கோமாதா பூஜை நடந்தது.பூஜையையொட்டி அதிகாலை கணபதி, மகாலட்சுமி, காமதேனு, வருண, நவகிரக, அஸ்திர, ஹோமங்கள் செய்து வழிபட்டனர். புலிவலம் அருள்நந்தி சிவாச்சாரியார் பூஜைகளை செய்தார். தொடர்ந்து, 108 பசுக்களுக்கு பூஜை செய்து, மக்கள் வணங்கினர். பூஜையில் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ணா தபோவனத்தை சேர்ந்த சச்சிதானந்த சுவாமி பங்கேற்று வாழ்த்தினார். விழாவை ஓம் சக்தி குழுவினரும், கிராம மக்களும் இணைந்து செய்தனர். கோவிலில், வரும், 13ம் தேதி சக்தி கரகம், காவடி, தீச்சட்டி ஏந்தி குதிரை வாகன புறப்பாடும், இரவு, 10 மணிக்கு தீ மிதித்தலும், தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். வரும், 14ம் தேதி, வாண வேடிக்கையுடன் அம்மன் தேர் பவனி நடைபெறும்.