நாகர்கோவில்: தக்கலை அருகே வேளிமலை குமாரகோயிலில் திருக்கல்யாண திருவிழா கடந்த ஏழாம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வாக முருகன் - வள்ளி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதற்காக காலையில் வேளிமலைக்கு எழுந்தருளிய முருக பெருமான், மாலையில் பூபல்லக்கில் வள்ளியுடன் திரும்பினார். கோயிலின் மேற்கு வாசலில் குறவர் படுகளம் நடைபெற்றது.
பின்னர் கோயிலில் முருகன்- வள்ளி திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் சுவாமி-அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு மாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.