தூத்துக்குடி : தூத்துக்குடி சிவன் கோயில் உண்டியல் வருவாய் இதுவரை இல்லாத அளவிற்கு 5 லட்சத்தை தாண்டியது. தூத்துக்குடியில் உள்ள பிரசித்த பெற்ற சங்கரராமேஸ்வரர் (சிவன்) கோயிலிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. அறநிலையத்துறை உதவி ஆணையர் வீரராஜன், நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் நயினார் ஆகியோர் முன்னிலையில் அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் மொத்தம் பணமாக 5 லட்சத்து 9 ஆயிரத்து 44 ரூபாய் இருந்தது. தங்கம் 28 கிராமும், வெள்ளி 106 கிராமும் இருந்தது. சிவன் கோயில் இதுவரை இல்லாத வகையில் உண்டியல் வருவாய் 5 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த முறையை விட ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் உண்டில் வருமானம் அதிகரித்துள்ளது. கடந்த முறை எண்ணும் போது 3 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.