பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி: தங்க கவச அலங்காரத்தில் மூலவர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2015 10:04
திருப்புத்தூர்: தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. நேற்று அதிகாலை மூலவர் உட்பட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின் தங்க கவச அலங்காரத்தில் மூலவர் காட்சி அளித்தார். காலை 10:30 மணிக்கு அங்குச தேவரும், அஸ்திர தேவரும் கோயிலில் இருந்து புறப்பட்டு குளக்கரையில் எழுந்தருளினர். நிர்வாக அறங்காவலர்கள் அரு.நாராயணன், வீர.முத்துக்கருப்பன் முன், தலைமை குருக்கள் பிச்சை தலைமையில் சிவாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்தனர். திருக்குளத்தில் அங்கு தேவருக்கும், அஸ்திர தேவருக்கும், ஸ்ரீதர் குருக்கள் தீர்த்தவாரி நடத்தினார். இரவு மூலவர் சன்னதி முன் தமிழ் பஞ்சாங்கம் வாசித்தனர்.