பதிவு செய்த நாள்
16
ஏப்
2015
11:04
கோவை: மலையாள மக்களின் விஷு பண்டிகை நேற்று கோவையில் கொண்டாடப்பட்டது. சித்தாபுதுார் அய்யப்பன் கோவிலில், நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கேரளாவின் பாரம்பரிய பண்டிகைகளில் விஷுவும் ஒன்று. விஷுவையொட்டி கேரளமக்கள், மா, பலா, வாழை உள்ளிட்ட கனிகள் மற்றும் மஞ்சள்கொன்றை, தங்க ஆபரணங்கள், ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் ஆகியவற்றை, வீடுகளில் வைத்து, நேற்று அதிகாலை வழிபாடு செய்தனர். கோவில்களில் விஷு பிறப்பையொட்டி, நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சித்தாபுதுார் அய்யப்பன் கோவிலில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ராமநாதபுரத்திலுள்ள தன்வந்திரி கோவிலில் தன்வந்திரி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வழக்கமாக, தமிழ் புத்தாண்டும், கேரள புத்தாண்டும் இணைந்து ஒரே நாளில் வருவது வழக்கம். இந்த ஆண்டு, தமிழ்புத்தாண்டுக்கு அடுத்த நாள் விஷு கொண்டாட்டங்கள் இருந்தன.