விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புவனேஸ்வரி சமேத புவனேஸ் வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. விக்கிரவாண்டி புவனேஸ்வரர் கோவிலில் புவனேஸ்வரி சமேத புவனேஸ்வரர், வினாயகர், முருகன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு சிவன் பார்வதி சிறப்பு அலங்காரத்தில், வீதியுலா வந்தனர். பூஜைகளை ரவி குருக்கள் தலைமையில் வேதாத் திரி குருக்கள் செய்தார். ஏற்பாடுகளை தர்மகர்த்தா சுப்புராயலு,செல்வகுமார், ரவி, ரமேஷ், ரெட்டி நல சங்க தலைவர் பாபு ஆகியோர் செய்திருந்தனர்.