சிதம்பரம்: சித்திரை தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதனையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் சிறப்பு தீபாராதனைகள் மற்றும் வழிபாடு நடந்தது. இதில் காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை மாரியம்மன் சன்னதியில் சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் 250க்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மலர்களால் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். பாலு சிவாச்சாரியார் தொட ங்கி வைத்தார். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் அறங்காவல் குழுத் தலைவர் வீராசாமி, பரம்பரை அற ங்காவலர்கள் கலியமூர்த்தி, செல்லதுரை மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.