செஞ்சி: செஞ்சி செல்வவிநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லட்ச தீப விழா நடந்தது. செஞ்சி பெரியகரம் செல்வ விநாயகர் ÷ காவிலில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் லட்ச தீப விழா நடந்தது. இதை முன்னிட்டு செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், பஞ்சலோக கவச அலங்காரம் நடந்தது. மாலை 6 மணிக்கு லட்ச தீபம் ஏற்றுதலும், சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடந்தது. இதில் 10 ஆயி ரத்திற்கும் அதிமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 10 மணிக்கு வாண வேடிக்கையுடன் சாமி வீதி உலாவும், இன்னிசை கச்சேரியும் நடந்தது.