Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் ஆதிவாலீஸ்வரருக்கு ... சின்னம்மன் - பெரியம்மன் கோவிலில் திருப்பணி! சின்னம்மன் - பெரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலமலை ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேக பணி தீவிரம்!
எழுத்தின் அளவு:
பாலமலை ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேக பணி தீவிரம்!

பதிவு செய்த நாள்

17 ஏப்
2015
11:04

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் பாலமலை ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேக பணிகள் விறு,விறுப்பாக நடந்து வருகின்றன. வரும் ஆவணி மாதம், கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் வரலாற்று சிறப்பு மிக்க பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளது. கடந்த, 2002ம் ஆண்டு இக்கோவில் புனரமைக்கப்பட்டு, புதிய ராஜகோபுரம், தாயார் சன்னதி, கோபுரங்கள், தும்பிக்கை ஆழ்வார், ராமானுஜர் சன்னதி கோபுரங்கள், சொர்க்கவாசல், இதர கோபுரங்கள், திருமதில்சுவர், அன்னதானம் மண்டபம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஆண்டு புதியதாக செய்யப்பட்ட தேரில் சித்ரா பவுர்ணமி தேர்திருவிழா கொண்டாடப்பட்டது.தற்போது இந்தாண்டு, கோபுரங்களுக்கு தங்கமுலாம் பூசி, வண்ணம் தீட்டி, மராமத்து பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் கூறுகையில்,“கோவில் வளாகத்தின் கூரைகள் பழுது பார்க்கப்பட்டு, மேல்புறம் முழுவதும் டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளன. காளிதாஸ் சுவாமிகள், ராமானுஜர் கோவில் உட்பிரகாரம் முழுவதும் கிரானைட் கற்கள் பதிக்கும் பணி முடிந்து விட்டது. சொர்க்கவாசல் பாதை புனரமைக்கப்பட்டுள்ளது. புதிய கொடிமரம் நிர்மாணம் செய்யப்படும். கோவில் வளாகத்தில், தசாவதார சிலைகள் அமைக்க பணிகள் விரைவில் துவக்கப்படும். பணிகளை முடித்து வரும் ஆவணி மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar