Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ... உளுந்தூர்பேட்டை கோவிலில் 1008 தீச்சட்டி ஏந்தி வழிபாடு! உளுந்தூர்பேட்டை கோவிலில் 1008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரராகவர் கோவிலில் பக்தர்கள் குளிக்க பிரமாண்ட தொட்டிகள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வீரராகவர் கோவிலில் பக்தர்கள் குளிக்க பிரமாண்ட தொட்டிகள்!

பதிவு செய்த நாள்

20 ஏப்
2015
11:04

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில், ஆண், பெண் பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக, மூன்று தொட்டிகள் அமைக்கும் பணி, முடியும் தறுவாயில் உள்ளது. திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலில், ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும், பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து, தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பர். இங்குள்ள ஹிருதாபநாசினி என்றழைக்கப்படும் கோவில் குளத்தில், பக்தர்கள் குளிப்பது வழக்கம். ஏழரை ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளத்தில், முழுவதும் தண்ணீர் நிரப்பும் வகையில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கும் பணி, ஓராண்டாக நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக, கோவில் குளத்தில் பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக, குளத்தின் ஒருபகுதியில் மூன்று பிரம்மாண்டமான தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன.ஒரு தொட்டியில் ஆண், மற்றொன்றில் பெண், மூன்றாவது தொட்டியில், ஆண், பெண் என, இருபாலர் குளிக்கும் வகையில், கட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ஏழரை ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தில், பக்தர்கள் குறிப்பாக வயதானவர்களும், பெண்களும் குளிக்க சிரமப்படுவதால், பாதுகாப்பாக குளிக்கும் வகையில், மூன்று தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன என்றார்.மேலும், மூன்று தொட்டிகளை இணைக்கும் வகையில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இப்பணிகள், இம்மாத இறுதிக்குள் நிறைவு பெறும் என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar