பதிவு செய்த நாள்
20
ஏப்
2015
12:04
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா, நாளை (21ம் தேதி ) இரவு நடக்கிறது. விழாவையொட்டி, 21ம் தேதி காலை மூலவர் அபிஷேகமும், மதியம், 1 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு, 11 மணியிலிருந்து, 22ம் தேதி காலை, 10 மணி வரை பூச்சொரிதல் விழாவும் நடக்கிறது. 28ம் தேதி இரவு, 12 மணிக்கு பெரியசாமி மலையில் செல்லியம்மனுக்கும், அதிகாலை, 4 மணிக்கு மதுரகாளியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து, நாள்தோறும் இரவு அன்ன வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனங்களில் பரிவார தெய்வங்களுடன், மே, 6ம் தேதி வரை அம்மன் திருவீதி உலா நடக்கிறது. திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி, மே, 7ம் தேதி காலை, 10.30 மணிக்கு நடக்கிறது. 8ம் தேதி உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஊஞ்சல் நிகழ்ச்சியும், 9ம் தேதி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் திருவீதி உலாவும், 11ம் தேதி மூலஸ்தான சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி மலை ஏறுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, திருச்சி உதவி ஆணையரும், தக்காருமான முல்லை, செயல் அலுவலர் ஜெயதேவி செய்துள்ளனர்.