பதிவு செய்த நாள்
30
ஜூன்
2011
10:06
வண்டலூர் : வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் லட்சுமி குபேரர் கோவிலில், ஜூலை 3ம் தேதி திருக்கல்யாண விழா நடக்கிறது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்," வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் லட்சுமி குபேரர் கோவிலில், இன்று காலை 5.30 மணிக்கு குபேர பகவானின் திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுமங்கலி பெண்கள் சூழ, வேத மங்கலம் முழங்க பந்தக்காலிட்டு குபேரருக்கு சிறப்பு பூஜையும், லட்சார்ச்சனையும் நடைபெறும். நாளை காலை 6 மணிக்கு கோ பூஜை முடித்து நடை திறக்கப்பட்டு, அதிர்ஷ்டதேவிக்கு அஷ்டலட்சுமி பூஜையும், குபேர பகவானுக்கு நாணயத்தால் ஆன சிறப்பு பூஜையும் நடைபெறும். சனிக்கிழமை லட்சார்ச்சனையும், மகாலட்சுமிக்கான சிறப்பு பூஜையும் நடைபெறும். பெருமாளுக்கு ரங்க மன்னராக அலங்காரம் செய்து, மகாலட்சுமி தாயாருக்கு ஆண்டாள் அலங்காரம் செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து மாலை மற்றும் மலர் கிளி வரவழைக்கப்பட்டு, ஞாயிறு காலை 7 மணிக்கு குபேர பகவான் மற்றும் சித்ரலேகாவிற்கு திருக்கல்யாண வைபவமும், மகாலட்சுமி தாயார், பெருமாளுக்கு கல்யாணமும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.