திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா துவங்கியது. திருக்கோவிலூர் கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் ÷ காவிலில் 50வது ஆண்டு ராமநவமி விழா நேற்று முன்தினம் துவங்கியது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் விழாவை துவக்கி வைத்தார். பரனுõர் மகாத்மா ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் உபன்யாசம் நடந்தது. தொடர்ந்து வரும் 25ம் தேதி வரை தினந்தோறும் இரவு 7:30 மணிக்கு சுவாமிகளின் உபன்யாசம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக 26ம் தேதி காலை 8:00 மணிக்கு சீதா லஷ்மண அனுமந்த சமேத ராமச்சந்திரமூ ர்த்தி வீதியுலா நடக்கிறது. காலை 11:00 மணிக்கு ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு திரு க்கல்யாண வைபவமும் நடக்கிறது. விழாவின் நிறைவாக 27ம் தேதி மாலை 6:00 மணிக்கு திவ்யநாம பஜனை நடக்கிறது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில் நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகளை சத்சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.