கம்மாபுரம் மேல அய்யனார் கோவிலில் சித்திரை திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2015 01:04
கம்மாபுரம்: சித்திரை திருவிழாவையொட்டி, கம்மாபுரம் மேல அய்யனார் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். கம்மாபுரம் மேல அய்யனார் கோவில் சித்திரை திருவிழாவை யொட்டி, 18ம்தேதி காலை 7:00 மணிக்கு காப்புக்கட்டும் நிகழ்ச்சி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அன்னப் படையல் நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை 4:00 மணிக்கு மேல அய்யனார் சுவாமி புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலி த்தார். இரவு 8:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். (19ம் தேதி) காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 8:00 மணிக்கு கும்ப பூஜை நடந்தது.