தென்னாடுடைய சிவனே போற்றி என்றால் சிவன் தென்னகத்திற்கு மட்டும் சொந்தமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2015 03:04
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! என்றே திருவாசகம் சொல்கிறது. சிவன் எல்லா நாட்டுக்கும் பொதுவானவர் என்றாலும், பாண்டியநாட்டில் சிவன் நடத்திய திருவிளையாடல் களைச் சிறப்பிக்கும் விதத்தில் தென்னாடுடைய சிவன் என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். கயிலைத் தாண்டகத்தில் திருநாவுக்கரசர், காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி என்று போற்றுகிறார். எங்கும் நிறைந்தவர் சிவன் என்று சைவ சமயம் கூறுகிறது.