பதிவு செய்த நாள்
30
ஜூன்
2011
10:06
காரைக்குடி : காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியல் திறப்பின் மூலம் 12 லட்சத்து 43 ஆயிரத்து140 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. சமீபத்தில் மாசி-பங்குனி விழா இந்த கோயிலில் நடந்து முடிந்தது. உண்டியல்கள் நிரம்பி காணப்பட்டதால், அவைகளை திறந்து எண்ண கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. உதவி ஆணையர் (பரமக்குடி) ராஜமாணிக்கம், ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, காத்தமுத்து, உதவி ஆணையர் முத்துராமன் முன்னிலையில் நேற்று முன்தினம் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. 10,86,480 ரூபாயும், நாணயங்கள் மூலம் 1,56,660 ரூபாயும், மொத்தம் 12 லட்சத்து 43 ஆயிரத்து 140 ரூபாய் கோயிலுக்கு வருமானமாக கிடைத்துள்ளது. தங்கம் 109.600 மில்லி கிராம், வெள்ளி 750 கிராம் இருந்தது.