பதிவு செய்த நாள்
22
ஏப்
2015
11:04
சிதம்பரம்: பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் மே 1ல்
கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு, இன்று யாகசாலை பூஜை துவங்குகிறது.
இன்று காலை கூஷ்மாண்ட ஹோமம், கணபதிஹோமம், நாளை காலை தன பூஜை, மாலை
வாஸ்து சாந்தி நடக்கிறது. ஏப்.,24 காலை மிருத்சங்க்ரஹணம், ரட்சாபந்தனம், 25 காலை
கலாகர்ஷணம், கட ஸ்தாபனம், மாலை முதல் கால யாகபூஜை நடக்கிறது. ஏப்.,26 காலை
இரண்டாம் கால யாகபூஜை, மாலை மூன்றாம் கால யாக பூஜை, 27 காலை நான்காம் கால
யாகபூஜையும், மாலை ஐந்தாம் கால யாகபூஜை, 28 காலை ஆறாம் கால யாகபூஜை, மாலை
ஏழாம் கால யாகபூஜை நடக்கிறது. ஏப்.,29 காலை எட்டாம் கால யாகபூஜை, மாலை ஒன்பதாம்
கால யாகபூஜை, 30 காலை பத்தாம் கால யாகபூஜை, மதியம் 11ம் கால யாகபூஜை, மாலை 12ம்
கால யாகபூஜை நடக்கிறது. மே1 காலையில் வடுகபூஜை, கோபூஜை, கஜபூஜை, அச்வ பூஜையைத் தொடர்ந்து, காலை 7.00-8.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
இரவு தெருவடைச்சான் பஞ்சமூர்த்தி வீதியுலா நடக்கும். மே 2 காலை தேர்த் திருவிழாவும், இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் லட்சார்ச்சனையும் நடக்கிறது. மே 3 காலை நடராஜருக்கு மகா அபிஷேகம், மதியம் 2.00 மணிக்கு ராஜசபையில் கும்பாபிஷேக விசேஷ தரிசனம், மே 4 இரவு பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு நடக்கிறது. விழா நாட்களில் இசை நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.