பதிவு செய்த நாள்
22
ஏப்
2015
02:04
கூவம்: கூவம் திரிபுராந்தக சுவாமி கோவிலில் நாளை, சித்திரை பெருவிழா, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
பேரம்பாக்கம் அடுத்த கூவம் கிராமத்தில் உள்ளது, திரிபுரசுந்தரி உடனுறை திரிபுராந்தக சுவாமி கோவில். ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பெருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாளை காலை, 7:30 மணி முதல், 9:00 மணிக்குள், கொடியேற்றமும், அதன்பின் சுவாமி வீதியுலாவும் நடைபெறும். முக்கிய நிகழ்வான தேரோட்டம், ஏப்., 29ம் தேதி காலை, 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் நடைபெற உள்ளது. திருவிழா, தொடர்ந்து, 14 நாட்கள் நடைபெற உள்ளது.
நாள் காலம் திருவிழா
ஏப்., 24: காலை பவழக்கால் சப்பரம் மாலை - பூத வாகனம்
ஏப்., 25: காலை பவழக்கால் சப்பரம் மாலை - அதிகார நந்தி
ஏப்., 26: காலை பவழக்கால் சப்பரம் மாலை - நாக வாகனம்
ஏப்., 27: காலை பஞ்சமூர்த்தி சேவை மாலை -ரிஷப வாகனம்
ஏப்., 28: காலை பவழக்கால் சப்பரம் மாலை -யானை வாகனம்
ஏப்., 29: காலை தேரோட்டம் மாலை -நால்வர் வீதியுலா
ஏப்., 30 : காலை குதிரை வாகனம் மாலை-பிச்சாடனர் உற்சவம் இரவு - திருக்கல்யாணம்
மே 1: காலை பவழக்கால் சப்பரம் இரவு- நடராஜர் அபிஷேகம்
மே 2: காலைவள்ளுவன் காட்சி மாலை- தீர்த்தவாரி இரவு - அவரோகணம்
மே 3: இரவு - திருவூடல் உற்வசம்
மே 4: இரவு - சண்டிகேஸ்வரர் உற்சவம்
மே 5: இரவு -பைரவர் வடமாலை
மே 6: இரவு - ரிஷப வாகனம்.