கும்பகோணம்: திருபுவனத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பட்டக்கால்தெருவில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. கோவில் திருப்பணிகள் கிராமவாசிகளால் நடைபெற்று, கடந்த 20ம் தேதி மாலை முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. 21ம் தேதி காலை இரண்டாம் காலமும், மாலை மூன்றாம் காலமும் யாகபூஜைகள் நடைபெற்றது.நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளும், கடம்புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, விமான கும்பாபிஷேகமும், மூலவர் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.