பதிவு செய்த நாள்
25
ஏப்
2015
12:04
மாமல்லபுரம்: ஸ்தலசயன பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம், 27ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இக்கோவில், 108 வைணவ திருத்தலங்களில், 63வது தலமாக விளங்குகிறது. இங்கு ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார் ஆகியோர் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். சித்திரை பிரம்மோற்சவம், நாளை மறுநாள், 27ம் தேதி, துவங்குகிறது. இதையொட்டி, நாளை மாலை 6:00 மணிக்கு, சேனை முதல்வர் வீதியுலா செல்கிறார். அதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் காலை 4:30 மணிக்கு, கொடியேற்றி, தினமும் காலை, மாலை என, இருவேளைகளில், உற்சவங்கள் நடைபெறும். காலை உற்சவம், 7:00 மணிக்கும், இரவு உற்சவம் 8:00 மணிக்கும் நடைபெறும்.