திருவெண்ணெய்நல்லூர்:திருவெண்ணெய்நல்லூர் அருகே சிவன் கோவிலில் சம்வத்ரா அபிஷேக விழா நடந்தது.திருவெண்ணெய்நல்லூர் அடுத்த தென்மங்கலம் புவனேஸ்வரி சமேத சீதப்பட்டீஸ்வரர் கோவிலில் சம்வத்ராஅபிஷேக விழா (வருஷாபிஷேகம்) நடந்தது. காலை 7:00 மணிக்கு குமாரசாமிதம்பிரான் சுவாமிகள் இடபக்கொடியேற்றி விழாவை துவக்கினார்.
காலை 8:00 மணிக்கு காஞ்சிபுரம் சண்முகப்ரியா திருமுறை இன்னிசை பாடினார். பேராசிரியர் சிவப்பிரகாசம், குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் பெரியபுராணம் குறித்து ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினர்.பகல் 12:00 மணிக்கு 55 பால் குடங்களை பெண்கள் ஊர்வலமாக கொண்டு வந்து மூலவருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து தீபாராதனையும், மாலை 5:30 மணிக்கு சிவபெருமான், பார்வதிதேவி தம்பதி சமேதராக அலங்கரிக்கப்பட்டு கோவிலை வலம் வந் தனர்.