பதிவு செய்த நாள்
29
ஏப்
2015
12:04
ஆத்தூர்: ஆத்தூர், மதுரகாளியம்மன், முனியப்பன் ஸ்வாமி கோவிலில் நடந்த, சித்திரை தேர்த் திருவிழா கோலாகலமாக நடந்தது.ஆத்தூர் நகராட்சி, 1வது வார்டு, கோட்டை, வசிஷ்ட நதி கரையின் வடக்கு பகுதியில், 600 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட முனியப்பன் ஸ்வாமி, தலையாட்டி விநாயகர், கருமாரியம்மன், சம்போடை வனத்தில் மதுர காளியம்மன் ஸ்வாமி கோவில்கள் உள்ளன. கடந்த, 22ம் தேதி, சித்திரை தேர்த்திருவிழாவுக்காக, காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. 24ம் தேதி, 1,008 பால் குடம் ஊர்வலம், கருமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது.இந்நிலையில், நேற்று, மாலை, 3 மணியளவில், தலையாட்டி விநாயகர், கருமாரியம்மன், ஸ்ரீமதுர காளியம்மன், முனியப்பன் ஸ்வாமிகள் என, இரண்டு தனித் தனி தேர்கள் அலங்காரம் செய்து, ஊர்வலமாக சென்றனர்.அப்போது, அலங்கரிக்கப்பட்ட ஸ்வாமிகள், முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக இழுத்து சென்று, கோவிலை வந்தடைந்தது. இந்த தேர்த்திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.